states

img

காங்கிரசுடன் தனது கட்சியை இணைக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா?

ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலை வருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் ஆட்சி யை அகற்ற கடந்த ஓராடண் டாக பேரணிகளை நடத்தி வருகிறார்.  கடந்த வியாழனன்று தில்லியில் காங்கி ரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், விரைவில் தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கி ரசுடன் இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா - காங்கிரஸ் இணைப்பு பற்றிய தகவல் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்  படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளன. (ஆதாரம்:பிடிஐ)